சின்னத்திரை குடும்பத்தின் மருமகனாகிறார் பெரியதிரை பிரபலம்…

abi

தஞ்சாவூரில் அபி அண்ட் அபி கலை அறிவியல் கல்லூரி உட்பட ஏராளமான தொழில்நிறுவனங்களை நடத்தி வருபவர் அபினேஷ் இளங்கோவன்.

இவர் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், சூதுகவ்வும், பீட்சா, பீட்சா 2, இறைவி, உள்குத்து, காதலும் கடந்து போகும் உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக சி.வி.குமார் தயாரிக்கும் படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிட்டு வருபவர் இவர்தான்.

நடிகர் மனோபாலா தயாரித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் உட்பட சில படங்களை தற்போது வாங்கி வெளியிட உள்ளார் அபினேஷ் இளங்கோவன்.

ராஜ் டி.வியின் இயக்குநர்களில் ஒருவரான எம்.ரவீந்திரன், ஆர். விஜயலட்சுமி தம்பதிகளின் மகளான நந்தினி ரவீந்திரனை மணக்கிறார் அபினேஷ் இளங்கோவன்.

நந்தினி எம்.எஸ்.சி பட்டதாரி.

சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் வருகிற 27ந் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.

சென்னை, திருவான்மியூரில் நடக்கும் இந்த திருமண விழாவில் சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.