குறும் படவுலகில் இருந்து திரையுலகம் வரும் இயக்குநர் இயக்கும் ‘ஆத்மிகா’

126

சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற’ஆசிய விருதுகள்’ திரைப்பட விழாவில்  தான் இயக்கிய ‘மூடர் ‘குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கியுள்ள படம்தான் ‘ஆத்மிகா’.

இப்படத்தில்  வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம் ,நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த்நாக் கதாநாயகனாக நடித்துள்ளார் .

சன் டிவியில் வணக்கம் தமிழகம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய விஜே ஐஸ்வர்யா முத்துசிவம் கதாநாயகியாக நடித்துள்ளார் . மற்றும் ஜீவா ரவி , பிர்லா போஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார் .சரண்குமார் இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பை ராஜேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை கார்த்தி மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை ஆனந்த் அமைத்துள்ளார்.

சென்னை ,கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தைப் பற்றி இயக்குநர் தாமோதரன் செல்வகுமார்
பேசும்போது ,

“படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். பலரும் குறும்படத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் .சினிமா மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிறோம். பல பிரச்சினைகளில் பல்வேறு தடைகளுக்கிடையே  படத்தை  முடித்திருக்கிறோம்.

படப்பிடிப்பு வாகனங்கள் கூட செல்லாத பல இடங்களில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். புலிகள், காட்டெருமைகள் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில், அனைத்தையும் கடந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். இது ஒரு புது விதமான வகைமையில்  இருக்கும்.

Eminent personalities Vijay Sethupathi, GV Prakash Kumar and Aari congratulate ‘Aathmika’ team on its excellent first look