ஆடை படத்துக்கு அமலாபால் செய்த உதவி

100

’மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்தினகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் ‘ஆடை’ .

இந்த படத்தில் அமாலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பதால் சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டது.

இப்படம் சமூகத்துக்கு நல்ல ஒரு மெசேஜை சொல்லும் படமாகவும், பெண்களின் அதிகாரத்தைப்பேசும் படமாகவும் இருக்கும் என்று ‘ஆடை’ படம் வெளிவருவதற்கு முன்பு இயக்குனர் ரத்தினகுமார் தெரிவித்திருந்தார்.

நிர்வாணமாக அமலா பால் நடித்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆடை படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை.

ஆடை படத்தின் விநியோகஸ்தர் தர வேண்டிய பணம் குறித்த நேரத்தில் வராததினால் திணறிப்போனார் தயாரிப்பாளர்.

இத்தனை கஷ்டப்பட்டு(?) நடித்த ஆடை படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராமல்போய்விடுமோ என்று மனமுடைந்துபோன அமலாபால் சுமார் 40 லட்சம் பணத்தைக் கொடுத்து படம் வெளிவருவதற்கு உதவி செய்தார்.

அவர் மட்டும் பண உதவி செய்யவில்லை என்றால் ஆடை படம் கடந்தவாரம் வெளிவந்திருக்காது.

ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ரிலீஸ் ஆகாமல்போன நிலையில் இதேபோல் பெரிய தொகையைக் கொடுத்து அந்தப்படம் திரைக்கு வருவதற்கு காரணமாக இருந்தார் அமலாபால்.