மாரி செல்வராஜ் வழங்கும் அமீர் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவடைந்துள்ளது.
மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் நடைபெற்றது. சமூக அக்கறை கொண்ட முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு, மனித உறவுகள் மற்றும் உணர்வுப் போராட்டங்களைப் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது.
இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஷ்வின் ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை பிரதீபன் செல்வரத்தினமும், படத்தொகுப்பை செல்வா ஆர்.கே.வும் கவனிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர்.
அய்ங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கே. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.