Tamil Screen Tamil Screen - Online Tamil Movie Magazine

  • Home
  • News
    • Kollywood News
    • Bollywood News
    • Tollywood News
    • Political News
    • General News
    • English News
  • Reviews
  • Events
    • Audio Launch
    • Celebrity Events
    • Movie Launch
    • Press Meet
    • Trailer Launch
  • Photo Gallery
    • Movies Gallery
    • Actress Gallery
    • Actors Gallery
  • Videos
    • Valaipechu Voice Videos
    • Review Videos
    • Boxoffice Video
    • Trailers
    • Teasers
  • Series
  • Interviews
  • Collection Report
Tamil Screen
  • Home
  • General News
  • ஸ்வேன் அகாடமி லோகோவை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

ஸ்வேன் அகாடமி லோகோவை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

On Oct 2, 2026
2
Share

திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN), ஐபி கிளைம்ப் நிறுவனத்துடன் இணைந்து **‘ஸ்வேன் அகாடமி’**யை  தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர். கதை உருவாக்கம், திரைக்கதை எழுதும் நுட்பங்கள், நவீன கதைசொல்லல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

Related Posts

சர்வதேச Netflix படத்தில் ஒலிக்கும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள்

Oct 3, 2026

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும்  படம் 2027 ஜனவரி 21ஆம் தேதி ரிலீஸ்

Oct 3, 2026

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயணம் மற்றும் திரைக்கதை உருவாக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வேன் அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தை வெளியிட்டார்.

ஸ்வேன் அகாடமி மூலம் வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கப்பட உள்ளது. மேலும், ஐபி கிளைம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது.

மதன் கார்க்கி, லீனா மணிமேகலை, அனுராஜ் மனோகர், எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி படைப்பாளர்கள் நவீன கதைசொல்லல், டிஜிட்டல் காலத்தில் எழுத்தாளர்களுக்கான வாய்ப்புகள், திரைக்கதை நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்து உரையாற்றினர்.

சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் தலைமையில் செயல்படும் ஸ்வேன் அமைப்பின் இந்த புதிய முன்னெடுப்பு, தென்னிந்திய திரை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Director Lokesh KanagarajDirector Lokesh Kanagaraj launches SWAN Academy logoSWAN Academy logo
2
Share

Prev Post

கோல்டன் பாக்கியம் (Golden Bhagyam) டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு

Next Post

ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

You might also like More from author
General News

சர்வதேச Netflix படத்தில் ஒலிக்கும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள்

General News

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும்  படம் 2027 ஜனவரி 21ஆம் தேதி ரிலீஸ்

General News

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் ப்ரீ- ரிலீஸ்

General News

அக்ஷய் குமாரின் புதிய கிரைம் டிராமா படம் தொடக்கம்

Prev Next
Stay With Us
  • Facebook Likes
  • Twitter Followers
  • 10,400 Subscribers
  • 2,045 Followers

Recent Updates

சர்வதேச Netflix படத்தில் ஒலிக்கும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள்

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும்  படம் 2027 ஜனவரி 21ஆம் தேதி…

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’…

அக்ஷய் குமாரின் புதிய கிரைம் டிராமா படம் தொடக்கம்

அரசியலும் சமூக அக்கறையும் இணைந்த ‘ஆகாயம்’

Prev Next 1 of 258
© 2026 - Tamil Screen. All Rights Reserved.
Website Design: TRENDSZ UP
You cannot print contents of this website.
  • Likes
  • Followers
  • Subscribers
  • Followers