சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’

0

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார்.

டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்க, யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.