கேஆர்ஜி கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் தயாரிக்கப்படுகிறது.
Related Posts
மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்த விரிவான அறிவிப்புகள் – கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் – விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.