கொடை பட இசை வெளியீட்டு விழா

90

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’.

இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தேறியது.

இவ்விழாவினில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி…

இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் கார்த்திக் சிங்கா…
இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது, நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.

நடிகை அனயா …
தமிழில் இது என் முதல் படம். நான் இந்த திரைப்படம் மூலமாக நிறைய கற்றுகொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

நடிகர் ராதாரவி …
இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும் படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர்…
இந்த படத்தில் எனக்கு சிறிய ரோல் என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய உதவி செய்தனர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி

நடிகர் ரோபோ சங்கர் …
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் …
படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது, இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். இயக்குனருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும், அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் அம்மா டி.சிவா …
ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. எம் எஸ் பாஸ்கர் போன்ற சிறந்த நடிகர்களை திரையில் பார்ப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை சரியான முறையில் புரமோட் செய்து, மிகப்பெரிய வசூலை, படக்குழு ஈட்ட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இயக்குனர் எழில்…
படத்தின் டிரெய்லர் ஈர்க்கும் படி அமைந்து இருந்தது. படத்தின் ரீரெக்கார்டிங் கதையோட்டதோடு ஒன்றி போய் உள்ளது. இந்த படம் வெற்றி பெரும் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. படக்குழுவினர் உடைய உழைப்பு பாடல்களிலும், டிரெய்லரிலும் நன்றாக தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

கொடை படத்தின இயக்குனர் ராஜா செல்வம்…
ஜம்பாவான்கள் எங்கள் படத்திற்கு வந்து வாழ்த்தியது மிக மகிழ்ச்சி. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளை கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவளியுங்கள் நன்றி.