கதாநாயகனாக எஸ்.ஜெ.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
மற்றும் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, டிஎஸ்ஆர், ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி , அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் சுந்தர்.சி யிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை கதாநாயகனாக வைத்து ” முத்தின கத்திரிக்காய் ” என்ற வெற்றிப் படத்தை இயக்ககிய வேங்கட் ராகவன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
நெடுநல்வாடை, எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பு என்.பி. ஸ்ரீகாந்த் , தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார், பாடல்கள் அருண்பாரதி, சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ், நடனம் தீனா – சாண்டி, மக்கள் தொடர்பு மதுரைசெல்வம், மணவை புவன் , கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் டிஆர் ரமேஷ், நாகர் பிலிம்ஸ் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
எஸ்ஜே.சூர்யா இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள் ஆனால் இந்த படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அவருக்கு.
இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் “கடமையை செய்” திரைப்படம் POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும் நடிகர்கள், TECHNICIANS அனைவருக்குமான PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர்.
இப்படியாக இரண்டு மூன்று முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா CAMP அமைக்கப்பட்டு அனைவரும் NEGATIVE என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.