சென்னை – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’

795

ஹீரோ சினிமாஸ் தயாரிக்க, இயக்குனர் பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் சண்முகவேல் அய்யனார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் – ‘9 – 10’. (ஒன்பதிலிருந்து பத்து வரை)

‘காந்தர்வன்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஸ்வப்னா மேனன் இந்தப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் மோகன்லால் நடித்த மலையாளப் படமான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தவர்.

‘சிலந்தி’ படத்திற்கு இசையைமத்த கார்த்திக் இசையமைக்கிறார்.

அதென்ன ஒன்பதிலிருந்து பத்து வரை?

“9 மணியிலிருந்து 10 மணி வரைக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. ” என்கிற இயக்குநர் கதைச்சுருக்கத்தையும் சொன்னார்.

“ஸ்வப்னா ஒரு முக்கிய விஷயமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் செல்கிறார். அந்தக் காரின் டிரைவர்தான் கதிர்.

கதிருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்று வினோதமாக இருக்கிறது.

அதனால் எரிச்சலுடனே காரில் பயணம் செய்கிறார் ஸ்வப்னா. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இவர்களைப் பின் தொடர்ந்து போலீசும் செல்கிறது.

காஞ்சிபுரம் சென்றதும் ஸ்வப்னா, கதிருக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். பின்னர் கதிர், ஸ்வப்னாவுக்கு அதை விட பேரதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

“இந்தப் படம் பல சுவாரசியமான திருப்பங்களுடனும், அதிரடி ஆக்ஷனுடனும், நகைச்சுவையுடனும் இருக்கும். ஒரு 20-20 மேட்ச் பார்த்தது போன்ற பரபரப்பு இருக்கும்,” என்கிறார் படத்தின் இயக்குனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தியது புதுமையான அனுபவமாக அமைந்தது என்று சொல்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரான ராஜரத்தினம்.

ஒன்பதிலிருந்து பத்து வரை படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது.