ஆபாசத்தை விற்றுப்பிழைக்கும் வியாபாரிகளின் முகத்தில் கரி

42

கடந்த வாரம் வெளியான படங்களில் 90 எம்.எல். என்ற ஆபாசப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 8 கோடி கொடுத்து எம்.ஜி. அடிப்படையில் வாங்கிய டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் என்ற விநியோகஸ்தருக்கு சுமார் 5 கோடி நஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது.

அதர்வா நடித்த பூமராங் படத்தை வெளியிட அக்ரிமென்ட் போட்ட டிரைடன்ட் ரவிந்திரன், 90 எம்.எல். படத்தை பினாமி பெயரில் வாங்கி வெளியிட முடிவு செய்ததோடு, ஏற்கனவே அக்ரிமெண்ட் போட்டு வெளியிட ஒப்புக்கொண்டிருந்த பூமராங் படத்தின் ரிலீஸ் தேதியையே தள்ளி வைத்தார்.

அவரது செயல் தயாரிப்பாளர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது.

அவர்களுடைய சாபமோ என்னவோ 90 எம்.எல். படத்தை காலி பண்ணிவிட்டது. படம் வெளியான முதல் காட்சி மட்டும் ஹவுஸ்ஃபுல்லான நிலையில் அன்றைய தினத்தின் அடுத்தடுத்த காட்சிகளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் போனது.

ஆபாசப்படம் என்பதால் மக்கள் திரண்டு வருவார்கள் என்று கணக்குப்போட்ட ஆபாசத்தை விற்றுப்பிழைக்கும் வியாபாரிகளின் முகத்தில் மக்கள் கரியைப் பூசிவிட்டனர்.