செல்போனில் ரகசியம் பேசினால் ஆபத்து… 88 படம் சொல்லும் மெஸேஜ்..

1596

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு 96 என்று தலைப்பு வைத்ததைப் பார்த்து இன்ஸ்ஃபயராகிவிட்டார்களோ என்னவோ… ஏ.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு 88 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார்.

மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார், பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன் ,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வெற்றிமாறன் என்பவர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தயாரத்னம் இசையமைக்கிறார். அறிவுமதி, மதன்கார்க்கி பாடல்களை எழுதுகின்றனர்.

கலை – ஆரோக்கியராஜ்

நடனம் – காதல் கந்தாஸ்

எடிட்டிங் – அவினாஷ்

ஸ்டண்ட் – சக்தி சரவணன்

இனை தயாரிப்பு – வினோத்

தயாரிப்பு – ஏ. ஜெயக்குமார்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன்.

சென்னை மற்றும் ஆந்திரா, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஜுலை மாதம் 14 ம் தேதி படம் வெளியாகிறது.

88 படம் பற்றி இயக்குநர் மதன் சொல்வது என்ன?

“இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது.

பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது.

கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம்தான் செல்போன்.

எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் இந்தப்படத்தில் அலசி இருக்கிறோம்..

அதிலும் பெண்கள் எதையெல்லாம் செல்போனில் பகிரங்கமாகப் பேச கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.

இதை கமர்ஷியல் கலந்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்..” என்கிறார் இயக்குநர்.

அப்படீன்னா படத்துக்கு செல்போன் என்றல்லவா தலைப்பு வைத்திருக்க வேண்டும்?