இரண்டு நாட்கள்…! 28 நட்சத்திரங்கள்…! – களைகட்டிய ரீ யூனியன்…!

1458

80 களில் முன்னணி நட்சத்திரங்களாக கொடிகட்டிப் பறந்த தென்னகத் திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி மலரும் நினைவுகளில் மூழ்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அவர்களின் இந்த கொண்டாட்டம் 8 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது.

வழக்கமாக சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இண்டர்காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸ் (Intercontinental Resorts) என்ற கேளிக்கைவிடுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களுக்கு நீண்டுள்ளது.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனைவரும் ஊதா நிற உடையணிந்து வந்ததுதான் ஹைலைட்.

நவம்பர் 17 ஆம் தேதி காலை அனைவரும் சங்கமமானார்களாம்.

அந்த இடம் முழுவதும் ஊதா நிறப்பூக்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இரவு 7 மணிக்கு அங்குள்ள கூடத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பிரபலமாக வரத்துவங்க, நடிகை சுஹாசினி மற்றும் நடிகை லிசி ஆகியோர் நடிகர் ராஜ்குமார் சேதுபதி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு துணையுடன் அனைவரையும் உபசரித்துள்ளனர்.

அதன் பின்னர் மும்பை, கேரளா, பெங்களூரு, ஹைதரபாத் சேர்ந்த ஒவ்வொரு திரையுகை சேர்ந்த பிரபலங்களும் வந்துள்ளனர்.

அதன் பின்னர் நடைபெற்ற கூட்டு புகைப்படத்தில் இந்திய திரையுலகை சார்ந்த 28 பிரபலங்கள் ஊதா வண்ண உடையுடன் கலந்து கொண்டனர்.

இந்தக் கேளிக்கையில் ஓர் அங்கமாக 1960 மற்றும் 70களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக் நடைபெற்று அதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

80s-reunion

பூனம் திலான், ஜாக்கி ஷ்ரோப், கே. பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடகர் ஸ்ரீராம் பாட, அந்த பாடல் தொடர்பான சுவாரஸ்யமான நிகழ்வுகளை பிரபலங்கள் நினைவுக்கூர்ந்தனராம்.

இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்துள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட 28 பிரபலங்களும் 19ம் தேதி பிரியா விடை பெற்று தங்கள் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்…

1. சிரஞ்சீவி

2. வெங்கடேஷ்

3. சரத்குமார்

4. ஜாக்கி ஷிராஃப்

5. கே.பாக்யராஜ்

6. ராஜ்குமார்

7. அர்ஜுன்

8. நரேஷ்

9. பானுசந்தர்

10. சுமன்

11. சுரேஷ்

12. ரஹ்மான்

13. சுஹாசினி

14. குஷ்பு

15. ராதிகா சரத் குமார்

16. அம்பிகா

17. ராதா

18. ஜெயசுதா

19. பூனம் திலான்

20. பூர்ணிமா பாக்யராஜ்

21. ரம்யா கிருஷ்ணன்

22. பார்வதி ஜெயராம்

23. சுமலதா

24. லிசி

25. ரேவதி

26. மேனகா

28. ஷோபனா

29. நதியா