நட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா? மைதானத்துக்கு வெளியே ஆடவா?

1835

நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி  ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் நடிகர், நடிகைகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் ஆறு விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள். ஆறு ஓவர்கள் கொண்ட போட்டியாக இது இருக்கும். இந்த விளையாட்டுமுறைக்கு ‘ஹாங்காங்க் 6′ என்று பெயராம்.

இந்த போட்டியில்,  சென்னை சிங்கம்ஸ்’ அணிக்கான கேப்டனாக சூர்யா, ‘மதுரை காளைஸ்’ அணிக்கான கேப்டனாக விஷால், ‘கோவை கிங்ஸ்’ அணிக்கான கேப்டனாக கார்த்தி, ‘நெல்லை டிராகன்ஸ்’ அணிக்கான கேப்டனாக ஜெயம்ரவி, ‘ராம்நாட் ரைனோஸ்’ அணிக்கான கேப்டனாக விஜய் சேதுபதி, ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணிக்கான கேப்டனாக ஜீவா, ‘சேலம் சீட்டாஸ்’ அணிக்கான கேப்டனாக ஆர்யா, ‘திருச்சி டைகர்ஸ்’ அணிக்கான கேப்டனாக சிவகார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை சிங்கம்ஸ்: கேப்டன் – சூர்யா

விக்ராந்த், நந்தா, உதய், அருண் விஜய், அர்ஜுன், ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கெளரி முங்கல், திவ்யா, ருக்மினி.

மதுரை காளைஸ்: கேப்டன் – விஷால்

ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே. சுரேஷ், மன்சூர் அலிகான், வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி

கோவை கிங்ஸ்: கேப்டன் – கார்த்தி

பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே. ரித்தீஷ், தமன்னா, மது ஷாலினி, ஸ்ருஷ்டி டாங்கே, மிஷா, அபிநயஸ்ரீ.

நெல்லை டிராகன்ஸ்: கேப்டன் – ஜெயம் ரவி

அரவிந்த் சாமி, விஜய் வசந்த், செளந்தர்ராஜா, பிரித்வி, அஸ்வின் சேகர், வைபவ், ஸ்ரீ திவ்யா, நமிதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி.

ராமநாடு ரைனோஸ்: கேப்டன் – விஜய் சேதுபதி

ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஈஸ்வரி கணேஷ், சக்தி, சிரிஷ், அருண் பாலாஜி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

தஞ்சை வாரியர்ஸ்: கேப்டன் – ஜீவா

அதர்வா, லக்‌ஷ்மண், பசுபதி, சரண், அசோக், பிளாக் பாண்டி, அமலா பால், தன்சிகா, நிகிஷா படேல், பிளோரா ஷைனி, சஞ்சனா சிங்

சேலம் சீட்டாஸ்: கேப்டன் – ஆர்யா

கார்த்திக் முத்துராமன், உதயநிதி ஸ்டாலின், ஆதவ், உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா

திருச்சி டைகர்ஸ்: கேப்டன் – சிவகார்த்திகேயன்

விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ஷாம், ஹேமசந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா.

ஒவ்வொரு அணியிலும் நடிகைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

விளையாடுவதற்காக நடிகைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவா? அல்லது அவர்கள் சார்ந்த அணிக்காக சியர்ஸ் கேர்ளாக நடனம் ஆடுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது தெரியவில்லை.

ஒருவேளை நடிகைகளும் கிரிக்கெட் விளையாடினால் உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாடும் கிரிக்கெட் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

அதே நேரம் உண்மையான கிரிக்கெட் போட்டியாகவும் இருக்காது.