500 தியேட்டர்களில் ‘பெங்களூர் நாட்கள்’

759

அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய பெங்களூர் டேஸ் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம்.

இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும்போட்டி ஏற்பட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமயை வாங்கிய ‘பி.வி.பி.சினிமா’ நிறுவனம் தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி, லட்சுமி ராய் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து ‘பெங்களூர் நாட்கள்’ படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் பொம்மரிலு பாஸ்கர்.

‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே இப்படத்துக்கும் இசை அமைத்துள்ளார்.

‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள் தணிக்கை குழுவினர்!

‘பெங்களூர் நாட்கள்’ படம் பிப்ரவரி 5 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியாகும் இந்தப் படம், கர்னாடகாவில் 50 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 15 தியேட்டர்களிலும் வெளியாகிறது.

அமெரிக்காவில் 35 தியேட்டர்கள், பிற நாடுகளில் 100 தியேட்டர்கள் என மொத்தம் 500 தியேட்டர்களில் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தை வெளியிட உள்ளனர்.