ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…

1495

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க, மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் 22.12.2017 அன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 530 தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்  சில தினங்களுக்கு முன் வேலைக்காரன் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா    பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

‘‘ ‘தனி ஒருவன்’ படம் மாதிரி ‘வேலைக்காரன்‘ படமும் நல்ல ஒரு படமாக வந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் சமூகம் கேட்க நினைத்த ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். இருபது வருஷமாக எனக்குள் இருந்த என் கோபத்தை வெளிப்படுத்திய படம்தான் ‘தனி ஒருவன்’. அதுமாதிரி சோஷியல் மெசேஜ் சொல்லக்கூடிய ஒரு படம் பண்ணனும் என்று ஆசை இருந்தது. அதுதான் ‘வேலைக்காரன்’.

மெசேஜ் சொல்கிற படங்களை சிறிய பட்ஜெட்டில் கூட எடுக்கலாம். ஆனால் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசேஜுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கிறேன்.

‘வேலைக்காரன்’ படத்தில் முதலாளிகள் செய்யும் தவறுகளையும் சுட்டி காட்டியிருக்கிறேன், தொழிலாளிகள் தரப்பில் இருக்கும் தவறுகளையும் சொல்லியிருக்கிறேன். ”

என்று நீண்ட உரையாற்றிய இயக்குநர் மோகன்ராஜாவின் பேச்சு, வேலைக்காரன் படத்தை ஊடகங்கள் என்ன கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும் என்பதை சொல்வதாக இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க, சென்னையில் உள்ள அனைத்து மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 300 டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு தேவி காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் வேலைக்காரன் படம் திரையிடப்பட்டுள்ளது.

இரண்டு தியேட்டர்கள், ஒருநாளைக்கு நான்கு காட்சிகள், ஒரு காட்சிக்கு 300 டிக்கெட்டுகள் என்றால் தேவி காம்ப்ளக்ஸில் மட்டும் ஒருநாளைக்கு 2400 டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

இதன்படி சென்னையில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட மல்ட்டிப்ளக்ஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் வேலைக்காரன் படம் திரையிடப்பட்டுள்ளது.

ஒரு தியேட்டரில் 4 காட்சிகளுக்கு 1200 டிக்கெட்டுகள் என்றால் மற்ற  தியேட்டர்களில்   சுமார் 50 தியேட்டர்களில் எவ்வளவு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டிருக்கும்?

இதுபோல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய முன்று தினங்களுக்கு வாங்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு டிக்கெட்டுகளை வாங்கி தயாரிப்பாளர் என்ன செய்வார்?

இரண்டு காரணங்கள்…

ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் என்று காட்டும். இதை வைத்து வேலைக்காரன் படத்துக்கு செம ஓப்பனிங் என்ற முடிவுக்கு மக்கள் வருவதற்கு வசதியாக இருக்கும்.

சரி… இந்த டிக்கெட்டுகளை  வைத்ததுக்ன்னு கொண்டு என்ன செய்வார்கள்?

சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு  இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.

பொதுவாக மற்ற ஹீரோக்கள் முதல்காட்சிக்குத்தான் இப்படி டிக்கெட்டுகளை வாங்கி தன்னுடைய ரசிகர்களுக்கு ஓசியில் கொடுத்து கைதட்டவும், விசில் அடிக்கவும் ஏற்பாடு செய்வார்கள்.

சிவகார்த்திகேயன் வித்தியாசமானவர்….

தன்னுடைய ரசிகர்களுக்காக தொடர்ந்து 3 நாட்களுக்கு  ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார்…

ரசிகர்கள் மீதுதான் சிவகார்த்திகேயனுக்கு என்னவொரு பாசம்…