2.0 படத்தில் நான் ஹீரோ இல்லை…! – ரஜினியின் பேச்சால் அப்செட்டான இயக்குநர் ஷங்கர்…

786

2.0 படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்க்க உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் காத்திருக்க…

அந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை… வில்லனாகத்தான் நடிக்கிறேன்

– என்று ரஜினி பேசியதைக்கேட்டதும் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

2.0 படம் மீதான எதிர்பார்ப்பும் வடிந்து மெல்ல மெல்ல உற்சாகம் இழந்தும் வருகிறார்கள்.

ராமாயணம், மகாபாரதமாக இருந்தாலும்…. ஹாலிவுட் படமாக இருந்தாலும் ஹீரோ வெல்வதும், வில்லன் வீழ்வதும்தான் ஃபார்முலா.

இதற்கு 2.0 படமும் விதிவலக்காக இருக்க முடியாது.

ரஜினி நடிக்கிறார் என்பதற்காக வில்லன் வெற்றிபெறுவதாக படம் எடுக்க முடியாது.

நிச்சயமாக 2.0 படத்திலும் ஹீரோதான் வெற்றியடைவார்.

2.0 படம் திரையில் ஓடுகிறபோது, ஹீரோ அக்ஷய் குமாரிடம் வில்லன் ரஜினி வீழ்கிறபோது, அதை ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

2.0 படம் திரையிடப்படும் தியேட்டர்களில் திரையும் இருக்காது… இருக்கைகளும் இருக்காது என்பதே உண்மை.

தன்னுடைய தலைவனை வில்லனாக சித்தரிப்பதை நிச்சயமாக ரஜினி ரசிகர்களால் நடிப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. எதிர்வினையாற்றியே தீருவார்கள்.

இந்தக்காட்சிகள், 2017 தீபாவளி அன்று 2.0 படம் ரிலீஸ் ஆகும்போது அரங்கேறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இது ஒரு பக்கம் இருக்க, 2.0 படத்தில் வில்லனாக நடிப்பதை ரஜினி பகிரங்கமாக போட்டு உடைத்ததால் இயக்குநர் ஷங்கரும், லைகா நிறுவனத்தினரும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

பொதுவாக தான் இயக்கும் படம் குறித்த அனைத்து தகவல்களையுமே படு ரகசியமாக வைத்திருப்பார் ஷங்கர்.

அவரது கேரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமான 2.0 படம் குறித்த விஷயங்களையும், குறிப்பாக ரஜினி வில்லனாக நடிக்கிறார் என்பதை பொத்தி பொத்தி வைத்திருந்தனர்.

ரஜினியோ இந்த ரகசியத்தை கேஷுவலாக போட்டு உடைத்துவிட்டார்.

2.0 ரஜினி வில்லனாக நடிப்பது ஹிந்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், தமிழில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

இதை நினைத்து இயக்குநர் ஷங்கரும், லைகா நிறுவனத்தின் முக்கிய புள்ளிகளும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்களாம்.