14வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் 2023

18

உலகம் முழுவதும் வாழ்கின்ற திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 14-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

எமது தாயகத்தில்(ஈழம்) வாழ்கின்ற படைப்பாளிகள் அனைவரும் இந்த ஆண்டும் பதிவு கட்டணம் ஏதுமின்றி உங்கள் திரைப்படங்களை நோர்வே தமிழ்த் திரைப்பட விழா குழுவுக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்ப அழைப்பிதழ் : 30.10.2022 ஆரம்பித்து

விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2023 நிறைவுபெறும்.

நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின்(2023) போட்டிகளுக்கான பிரிவுகள் :

NTFF 2023 தமிழ் மொழி :- குறும்படங்கள் – முழுநீளப் படங்கள் -காணொளிகள் -ஆவணப்படங்கள் -அனிமேஷன் படங்கள்

NTFF 2023 சர்வதேச மொழிகள் : -குறும்படங்கள் – முழு நீளப் படங்கள் – காணொளிகள் – ஆவணப் படங்கள் – அனிமேஷன் படங்கள்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் திரைத்துறைக் கலைஞர்களை, உலகத் திரைத்துறைக் கலைஞர்களை வாழ்த்தி, பாராட்டி, அங்கீகாரம் அளித்து, உலகத் தமிழர்களின் சிறந்த விருதாக “தமிழர் விருதுகள்” வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நோர்வே நாட்டிற்கு அனைத்துக் கலைஞர்களையும் அழைத்து தமிழர் விருது வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பினும், அது எமக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. ஆகவே திரைத்துறைக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் உங்களுடைய சுய விருப்போடு, நோர்வே நாட்டிற்கு வந்து தமிழர் விருதை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

தமிழ்நாட்டு அரசின் கலைத்துறை பிரிவு இதற்கான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.