தர்மதுரையை அலட்சியப்படுத்திய தமன்னா…

763

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே நடித்த ‘தர்மதுரை’ படம் 100 நாட்கள் ஓடியதாக சமீபத்தில் வெற்றிவிழா கொண்டாடினார்கள்.

ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்ற போது, படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் பங்குபெற்றனர்.

ஆனால் தர்மதுரை படத்தின் கதாநாயகியான தமன்னா மட்டும் கலந்து கொள்ளவில்லை.

தர்மதுரை படத்தின் புரமோஷனுக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததால் தமன்னா மீது தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.

அதை மனதில் வைத்துக் கொண்டுதான் தமன்னா தர்மதுரை விழாவுக்கு அவர் வரவில்லையாம்.

விழாவுக்கு அவர் வருகிறாரா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள தமன்னாவுக்கு போன் செய்தனராம். கடைசிவரை போனை அட்டெண்ட் பண்ணவே இல்லையாம் அவர்.

தமன்னாதான் இப்படி என்றால் அவருடைய மானேஜரும் கூட தர்மதுரை தயாரிப்பாளரின் போனை அட்டெண்ட் பண்ணவில்லையாம்.

இப்படிப்பட்ட நடிகைகளை தயாரிப்பாளர்கள் இன்னமும் தலையில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

கத்தி சண்டை புரமோஷனுக்கு வராத தமன்னாவை காப்பாற்றுவதற்காக விஷால் சொன்ன பொய்கள் அதைவிட கொடுமை.