மு.க.அழகிரியின் மருமகனை திருமணம் செய்து கொண்டாரா அஞ்சலி?

2683

அதிக அளவில் சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபட்ட நடிகை யார் என்று போட்டி வைத்தால் அஞ்சலிக்குத்தான் முதல் பரிசு.
கற்றது தமிழ் படத்தில் முகம் காட்டிய நாளில் இருந்தே அவரைப்பற்றி ஏகப்பட்ட சர்ச்சை செய்திகள். கடைசியாக சித்தி பாரதிதேவி விவகாரம்…!
அதன் பிறகு ஆந்திராவில் செட்டிலாகி, தமிழ்நாட்டை தலைமுழுகிவிட்ட அஞ்சலி பற்றி சில நாட்களாக மீண்டும் பரபரப்பு தகவல்.
மு.க.அழகிரியின் மருமகனும், தயாநிதி அழகிரியின் க்ளவுட்நைன் படநிறுவனத்தின் முக்கியப் புள்ளியுமான விவேக்ரத்னவேலுவை அஞ்சலி ரகசிய திருமணம் செய்துவிட்டார் என்பதே அது. இத்தகவல் புதிய தகவல் அல்ல..! க்ளவுட்நைன் படநிறுவனத்தின் தூங்காநகரம் படத்தில் அஞ்சலி நடித்தபோதே விவேக்ரத்னவேலுவுக்கும், அஞ்சலிக்கும் உறவு இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அடங்கிப்போன செய்தி இப்போது விவேக்ரத்னவேலு-அஞ்சலி ரகசிய திருமணம் செய்துவிட்டார்கள் என்கிற அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
இது பற்றி அஞ்சலி என்ன சொல்கிறார்?
\”அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\’\’ என்கிற அஞ்சலி அவரைப்பற்றி வெளிவந்த மற்ற சர்ச்சைகளுக்கும் விளக்கம் தந்தார்..
\’\’சுந்தர். சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த \’மத கஜ ராஜா\’ படத்திற்கு நான் டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்பந்தமானன விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதுவும் தவறான தகவல். கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு கால கட்டங்களில் என்னை ஆதரித்து, ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இனிவரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்பட்டால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பதில் தருகிறேன்.\’\’
என்றும் சொல்கிறார்.
ஊடகங்களுக்கு நன்றி என்று சொல்விட்டால், கண்டுக்காம விட்டுடுவாங்கன்னு நெனப்பு போலருக்கு!