நடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம்! – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்

2169

நான் கடவுள் படத்துக்குப் பிறகு காணாமல்போய் இலங்கைப் பக்கம் ஒதுங்கிய நடிகை பூஜா, நீ……………..ண்ட இடைவெளிக்குப் பிறகு விடியும் முன் என்ற படத்தில் நடிக்கிறார். அப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்காக சென்னை வந்திருந்தார்.
விடியும்முன் படத்தின் இசைவெளியீட்டு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பூஜாவுக்கு போன் செய்தாராம் சீமான்.
கன்னுக்குட்டி எப்படி இருக்கே? நல்லாருக்கியா? என்று அன்பொழுக குசலம் விசாரித்ததோடு, மேடையில் நீ தமிழ்லதான் பேசணும் என்றும் சொன்னாராம். அதன்படி தமிழில் பேசினார் பூஜா. பேச அழைக்கப்பட்டபோது அவரது பெயரை பூஜா உமா சங்கர் என்று சொன்னார்கள். உமா சங்கர் யார் என்ற கேள்விக்கு என் அப்பா என்று பதிலுரைத்துவிட்டுப் பேசினார்.
பரதேசி படத்துக்கு இவரைத்தான் பாலா கதாநாயகியாக தேர்வு செய்து வைத்திருந்தாராம். படப்பிடிப்பு தாமதமாக, விடியும் முன் படத்தில் நடிப்பதற்காக பரதேசி படத்திலிருந்து விலகியதாக சொன்னார் பூஜா உமா சங்கர்.
விடியும் முன் படத்தை இயக்கும் பாலாஜி கே குமார் அமெரிக்காவிலிருந்து வந்தவராம். ஒளிப்பதிவாளரோ பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்.
படத்தின் டிரெய்லரைத் திரையிட்டார்கள். சும்மா சொல்லக் கூடாது.. ஹாலிவுட் தரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here