தோனியாக மாறிய தினேஷ் கார்த்திக்: ஜடேஜா புகழாரம்!

577

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பேட் கம்மின்ஸை முன் கூட்டியே பந்துவீச வைத்து, சுனில் நரைனுக்கு டெத் ஓவர்களில் வாய்ப்பு வழங்கி வித்தியாசமான முறையில் அணியை வழி நடத்தினார் தினேஷ் கார்த்திக். இதனால், வெற்றி முகத்தில் இருந்த சென்னை அணி கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுகுறித்து கிரிக்பஸ் இணையதளத்துக்கு பேட்டியளித்த அஜய் ஜடேஜா, தினேஷ் கார்த்தியின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். “தினேஷ் கார்த்திக், தோனி போன்று செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மற்ற அணிகளுக்கு தோனி என்ன செய்தாரோ, அதை தினேஷ் கார்த்திக் சென்னை அணிக்குச் செய்துள்ளார்” எனப் புகழ்ந்து பேசினார்.

“பேட் கம்மின்ஸை முன் கூட்டி பந்து வீச வைத்ததால் சென்னை அணி ரன்களை குவிக்கத் தடுமாறியது. அதேபோல், சுனில் நரைன் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி வாட்சன் விக்கெட்டை கைப்பற்றி சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தினேஷ் கார்த்திக் இடத்தில் தோனியை பார்த்தேன்” எனத் தெரிவித்தார்.