டப்பிங் பேசும்போது என்னை அறியாமல் நானே கண்கலங்கிவிட்டேன் ” அருவா சண்ட ” படம் பற்றி நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி !

136

விரைவில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப் படம் தான் ” அருவா சண்ட ” படத்தின் முக்கிய காதாப்பாத்திரமாக வந்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது அருவா சண்ட படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..

என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது, சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்தேன். இதிலும் நாயகன் தம்பி V.ராஜா புதிது ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.
இது ஒரு சிறந்த கதைக்களம், நான் படத்திற்கு டப்பிங் பேசும்போது கூட நான் என்னை அறியாமலே கண் கலங்கினேன் அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தில் உள்ளது.
இது போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கதை நாயகனாக நடித்துள்ள தம்பி V.ராஜாவிற்கு வாழ்த்துக்கள், அவர் மேலும் பல சமூக சிந்தனையுள்ள படங்களை தயாரித்து நடிக்கவேண்டும் என்று பாராட்டினார்.

தனது வைர வரிகளின் மூலம் அருவா சண்ட படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமான பாடல்களை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து கூறியதாவது…
இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் இது போன்ற துடிப்பான இளைஞர்கள் சினிமா தயாரிக்க வருவது அதிசயம் தான். ஆனால் தம்பி V.ராஜா ஒரு கறுப்புத் தமிழன் , அவர் தயாரித்து, கதை நாயகனாக வருவதில் எனக்கு பெருமிதம். இந்த படத்தில் பாடல்கள் எழுதியுள்ளேன் அவையனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.

சமூக புரட்சி கொண்ட சாதியப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தை தயாரித்துள்ளார். இந்த தென்னாட்டு கருப்பு தமிழனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களுடன் ” யூ ” சான்றிதழ் பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் இந்த படத்தை ஆதிராஜன் இயக்கியுள்ளார். நாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.

கவிப்பேரரசு வரிகளுக்கு தரண் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சந்தோஷ் பாண்டி கவனிக்க, எடிட்டிங்கை V.J.சாபு ஜோசப் செய்துள்ளார், கலை சுரேஷ் கல்லேரி, ஸ்டண்ட் தளபதி தினேஷ், மற்றும் நடனத்தை தீனா மாஸ்டரும், ராதிகா மாஸ்டரும் அமைத்துள்ளனர்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் V.ராஜா கதை நாயகனாக நடித்து, தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளுக்காக காத்திருக்கிறது.