சிறுவாணி காட்டுப் பகுதியில் புதைகுழியில் சிக்கிய கதாநாயகன், கதாநாயகி

1387

மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படம் – சிறுவாணி. இப்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.

கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார் மற்றும் நெல்லை சிவா, அனுமோகன், சாமிநாதன், பசங்கசிவகுமார், ஜபக், எலிசபெத், நளினிகாந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சிறுவாணி படம் பற்றி இயக்குநர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ன சொல்கிறார்?
”படப்பிடிப்புக்காக சிறுவாணி காட்டுப் பகுதிக்குள் படப்பிடிப்பை நடத்தினோம். கதாநாயகன் சஞ்சய் நாயகி ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிராவை வைத்து படமாக்கினோம் அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போன்ற காட்சி. திடீர் என்று இருவரும் புதைகுழியில் விழுந்து விட்டனர்.”
அச்சச்சோ..அப்புறம் என்னாச்சு?
”பயத்தில் அவர்கள் கதற ஆரம்பித்தவுடன், காப்பாற்ற நாங்கள் ஓடினோம். நடந்த சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் சிலர் எங்களுடன் இணைந்து இருவரையும் காப்பாற்றினார்கள். அந்த ஊரை சேர்ந்த எனக்கே அந்த நிமிடத்தில் உயிர் போய் உயிர் வந்தது. படத்தில் இது மாதிரி நிறைய சம்பவங்களை சந்தித்திருக்கிறோம் அந்தமானில் அட்டை கடிக்கு பலர் நிறைய ரத்தத்தை இழந்திருக்கிறோம்.”
என்கிறார் இயக்குநர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.
நிறைய ரத்தத்தை இழந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சிறுவாணி படத்தின் ஸ்டில்ஸைப் பார்த்தாலே தெரியுதே!