உண்ணாவிரதத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! – கடுப்பான விஜய், அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை

2250

தலைவா படத்தை திரையிட்டால் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் காரணமாக தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அப்படத்தை வெளியிட முன்வரவில்லை. தலைவா படம் வெளிவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் மக்கள் மனறத்தில் நியாயம் கேட்கவும், தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் நடிகர் விஜய் தரப்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தது.
விஜய், சத்யராஜ், அமலா பால், மற்றும் தலைவா படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தொழில் நுட்பக் கலைஞர்கள் என பலரும், அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் இன்று அல்லது நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் – என்று கூறி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்கள்.
இந்த உண்ணாவிரதத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இவ்விஷயம் விஜய்க்கு சொல்லப்பட்டதும் கடுப்பாகிவிட்டாராம்.
இனி அரசாங்கத்தை நம்பி பிரயோஜனமில்லை. அரசாங்கத்தை எதிர்த்து களத்தில் இறங்கலாமா என்ற எண்ணத்தில் அவருக்கு ராஜகுருவாக இருந்து மந்திரம் ஓதும் அவரது தந்தையுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here