எந்த நேரத்திலும் – விமர்சனம்

yendha-nerathilum-stills-008

 

கதை

 
தமிழ்சினிமா இலக்கணப்படி லீமா பாபுவை கண்டதும் காதல் வயப்படும் ராமகிருஷ்ணன் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவருடைய காதலை லீமாவும் ஏற்றுக்கொள்கிறார்.

அக்கா சாண்ட்ரா எமி, அவரது கணவர் யஷ்மித், அப்பா கிருஷ்ணன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைக்க தன்னுடைய காதலியை வீட்டுக்கு கூட்டி வருகிறார்.

லீமாவைப் பார்த்ததும் மூன்று பேரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

அந்த அதிர்ச்சியிலேயே காரில் புறப்பட்டுச் செல்லும் சான்ட்ராவின் கணவரும், அப்பாவும் விபத்தில் சிக்கி இறக்கிறார்கள்.

சோகத்தை மறக்க ஊட்டியிலிருந்து கோத்தகிரியில் உள்ள பூர்வீக வீட்டுக்கு வருகிறார்கள் சாண்ட்ராவும், ராமகிருஷ்ணனும்.

அங்கு போனதும் லீமா உருவத்தில் உள்ள ஒரு ஆவி சாண்ட்ராவின் குழந்தை மீது புகுந்து கொண்டு அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது.

லீமா உருவத்தில் இருக்கும் அந்த ஆவி ஏன் சாண்ட்ராவை கொலை செய்ய முயற்சிக்கிறது? என்பதுதான் எந்த நேரத்திலும் படத்தின் மீதிக்கதை

 

கமெண்ட்…

 

ஏறக்குறைய பேய்ப்பட சீசன் முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில் பேயை நம்பி எடுக்கப்பட்டுள்ள படம்.

வழக்கமான பேய்ப்படமாக இல்லாமல், ஒரே மாதிரியான தோற்ற ஒற்றுமை கொண்ட இரண்டு பேரை வைத்து வித்தியாசமான பேய்ப்படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.

பேய்ப்படங்களில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கும்.

இந்தப் படத்தில் இரண்டுமே எடுபடவில்லை.

அதனால் படமும்…

tamilscreen.com Rating

review-rating-2-average