யாசகன் – விமர்சனம்

yasaghan

படித்து விட்டு நிரந்தர வேலையில்லாமல் பேப்பர் போடுவது, கூரியர் என சின்னச்சின்ன வேலைகளை  செய்து கொண்டிருக்கிறார் மகேஷ். அதனாலேயே அவரது அப்பா மகேஷை அடிக்கடி கழுவி ஊற்றுகிறார்.

மற்றவர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் உடனே ஓடோடி உதவும் மகேஷுக்கும், அவரது அப்பாவின் நண்பரின் மகளான நிரஞ்சனாவுக்கும் காதல்.

நிரஞ்சனாவும் வேறு ஊருக்குச் சென்று விடுகிறபோது, திடீரென மகேஷ் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

ஏன்..என்னாச்சு?

இதற்கான விடைதான் யாசகன் படத்தின் க்ளைமாக்ஸ்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ‘அங்காடித் தெரு’ மகேஷ் இயக்குநர் சொன்ன வேலையை மட்டும் செய்திருக்கிறார். எல்லா தமிழ்சினிமா கதாநாயகிகளைப்போலவே கதாநாயகனை கண்டதும் காதலித்து, கடைசியில் கைப்பிடிக்கிறார் நிரஞ்சனா.

இயக்குநர் துரைவாணன் அமீர், சசிகுமாரிடன் தொழில் கற்றவராம்.