ஆபாச இணையதளங்களுக்கும், ஆண்ட்ராய்ட் மாஃபியாக்களுக்கும் ஆப்பு…. Comments Off on ஆபாச இணையதளங்களுக்கும், ஆண்ட்ராய்ட் மாஃபியாக்களுக்கும் ஆப்பு….

இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ள எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது.

அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

எக்ஸ் சோன் என்ற ஹிந்திப்படத்துக்கு சென்சாரில் அனுமதி கிடைக்கவில்லை.

அதே போன்றதொரு படம்தான் எக்ஸ் வீடியோஸ்.

எக்ஸ் சோன் படத்துக் கிடைக்காத தணிக்கை சான்றிதழ் எக்ஸ் வீடியோஸ் படத்துக்கு கிடைத்தது எப்படி?

சாமான்யவர்களிடம் தங்களின் அதிகாரத்தைக் காட்டும் சென்சார்போர்டு அதிகாரிகள், அரசியல் அதிகாரமிக்கவர்கள் மற்றும் பணம் படைத்தவர்களிடம் பல்லைக்காட்டுவதோடு, அவர்கள் எப்பேற்பட்ட சமூகக்கேடுகள் நிறைந்த படத்தை எடுத்து வந்தாலும் பணத்தை வாங்கிக் கொண்டு சான்றிதழ் வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

எக்ஸ் வீடியோ படத்துக்கும் இந்த வழியில் சான்றிதழ் பெறப்பட்டதா? படத்தின் இயக்குநர் சஜோ சுந்தரைக் கேட்டால்…

“வெறுமனே பெண்களில் உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது. பெண்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படம்போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாம். ஆனால் ஆபாச இணைய தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் இது.

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்.

இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது?

அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.

தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது.

சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்.

எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..

 

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
பிப்ரவரி-2 ரிலீஸ் படங்கள்… – ஒரிஜினல் கலெக்ஷன் ரிப்போர்ட்…!

Close