விவேகம் படத்தின் பிசினஸ் எவ்வளவு தெரியுமா? வேதாளம் சாதனையை முறியடித்தது….

vivegam

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானதும் ஏற்பட்ட பரபரப்பில், தனுஷ் நடிக்கும் விஐபி-2 படம் குறித்த தகவல்கள் மட்டுமல்ல, ஆகஸ்ட் 24 அன்று வெளிவரவிருக்கும் விவேகம் படம் குறித்த பில்ட்அப் செய்திகளும்கூட பிசுபிசுத்துப்போய்விட்டன.

சமூகவலைத்தளம் பக்கம் தலைகாட்ட முடியவில்லை.

எங்கே திரும்பினாலும் ‘ஆளப்போறான் தமிழன்’ புராணம்தான்.

காசுவாங்கிக் கொண்டு ட்விட்டரில் கூவும் காக்கைகளும் மெர்சல் பற்றி கூவிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விவேகம் படத்தின் மொத்த பிசினஸையும் பக்காவாக முடித்துவிட்டு சத்தமில்லாமல் இருக்கிறது – சத்யஜோதி பிலிம்ஸ்.

அஜித் நடித்த வீரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் வெறும் 34 கோடிக்குத்தான் விற்கப்பட்டது.

ஆனாலும், அந்தப் படத்தை எடுத்த தயாரிப்பாளர் மட்டுமல்ல வாங்கியவர்களும் தலையில் துண்டுபோடும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

வீரம் படத்தின் தோல்வியைப் பற்றி கவலையேபடாமல் இயக்குநர் சிவாவுடன் அஜித் இரண்டாவது முறையாக இணைந்தார்.

அஜித் – சிவா கூட்டணியின் வீரம் படம் வெற்றியடையவில்லை என்றாலும், அவர்கள் இரண்டாவதுமுறையாக இணைந்த வேதாளம் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் 42 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டது.

வேதாளம் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்ததாலோ என்னவோ வேதாளம் படத்தைவிட சுமார் 12.5 கோடிக்கு கூடுதலாக பிசினஸ் ஆகியிருக்கிறது விவேகம்.

சென்னை சிட்டி – 5 கோடி

செங்கல்பட்டு – 11.50 கோடி

வட ஆற்காடு – 4 கோடி

தென் ஆற்காடு – 3.25 கோடி

மதுரை – 6.30 கோடி

சேலம் – 5.35 கோடி

கோவை – 9.30 கோடி

திருச்சி, தஞ்சாவூர் – 6.20 கோடி

திருநெல்வேலி, கன்னியாகுமரி – 3.60 கோடி

ஆக, விவேகம் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் 54.5 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

விவேகம் படத்தின் பட்ஜெட் என்ன?

விவேகம் படத்தின் மொத்த பிசினஸ் எவ்வளவு?

விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு லாபம் எவ்வளவு?

விவேகம் படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

விவேகம் படத்தை இயக்கிய சிவாவுக்கு சம்பளம் எவ்வளவு?

போன்ற விவரங்கள் நாளை…

-ஜெ.பிஸ்மி