அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு… நம்பி ஏமாந்த விஷ்ணுவிஷால்

vishnu-vishal-studioz-production-no

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகராக அறிமுகமான விஷ்ணுவிஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் கமர்ஷியல் ஹிட் அவருக்கு வசப்படவே இல்லை.

அதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

இப்படியே போனால் ஒரு கட்டத்தில் வீட்டில் உட்கார வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்த விஷ்ணுவிஷால், புத்திசாலித்தனமாக ’விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ என்ற பட நிறுவனம் தொடங்கினார்.

போலீஸ் உயர் அதிகாரியாக உள்ள அவரது அப்பா மூலம் ஃபைனான்ஸ் ரெடி பண்ணி ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற படத்தைத் தயாரித்தார்.

அந்தப் படத்தில் நடிகராக மட்டுமின்றி  தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டார் விஷ்ணு விஷால்.

இந்த படத்தை தொடர்ந்து இப்போது தனது இரண்டாவது தயாரிப்பாக ‘கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் ‘கதாநாயகன்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார்.

கதாநாயகன் படம் முடிவடைவதற்கு முன்பே, தனது மூன்றாவது பட தயாரிப்பு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் பணியாற்றிய செல்லா என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில்விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார்!

இது ஒரு பக்கம் இருக்க, நடிகராக அறிமுகமான காலத்திலிருந்து தனக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்தவரை திடீரென மாற்றினார்.

அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக சொல்லப்பட்டதை நம்பி தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த பி.ஆர்.ஓ.வை மாற்றிவிட்டு வேறு ஒருவர் பின்னால் போன விஷ்ணுவிஷால், தற்போது மீண்டும் தன் பழைய பி.ஆர்.ஓ.வை தேடிப்போய்விட்டார்.