விஞ்ஞானி – விமர்சனம்

Vingyani Movie Stills (54)

விவசாயிகள் சந்தோஷமாக இருந்தால்தான் நம்ம நாடு வல்லரசாகும் – என்ற கருத்தை சொல்லும் படம்.

மேலோட்டமாகப் பார்த்தால் கத்தி படத்துக்கும் விஞ்ஞானி படத்துக்கும் ஆறு வித்தியாசங்கள்தான்.

குளிர்பான கம்பெனி வைக்க விவசாய நிலத்தைப் பிடுங்கப்போய் ஏற்படும் பிரச்சனைகள் கத்தி படத்தின் கதை என்றால்… பேக்டரி கட்டுவதற்காக விவசாய நிலத்தைப் பிடுங்க நினைப்பவர்களால் வரும் பிரச்சனைகளேவிஞ்ஞானி படம்.

புதைத்து வைக்கப்பட்ட தொல்காப்பியர் காலத்து  நெல் விதைகள்…அதிலிருந்து புதிய விதைகளை கண்டு பிடித்தல்…என்று 14 ரீல்களில் கதை சொல்லி இருக்கிறார் புதுமுக இயக்குநர்  பார்த்தி.

கதாநாயகி மீரா ஜாஸ்மின். படத்தின் ஒரே ஆறுதல்.