விமலை பதற வைத்த ‘அந்த செய்தி’….. விஷயம் என்னவாக இருக்கும்?

vimal-2

பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் விமல்.

தற்போது மன்னர் வகையறாவை முடித்த கையுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் விமல்.

அதனை தொடர்ந்து ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி இயக்கதில் நடிக்கயுள்ளார்.

இமான் இசையமைக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப்படங்களைத் தொடர்ந்து, விமலின் திரையுல வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்த களவாணி பட இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் களவாணி-2’ படத்தில் மீண்டும் விமல் நடிக்க இருக்கிறார்.

களவாணி- 2 படத்தில் சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் தொடர்கிறது.

மாதவன் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவிருக்கும் சற்குணம் அதைத் தொடர்ந்து ‘களவாணி-2’ படத்தைத் தொடங்குகிறார்.

இதற்கிடையயில், களவாணி படத்தைத் தயாரித்த ஷெர்லி மூவீஸ் நஷீர் தயாரிப்பில் களவாணி – 2 படம் உருவாகவிருப்பதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும் செய்தி வெளியாக, பதறிவிட்டார் விமல்.

“இது உண்மைக்கு புறம்பான செய்தி. ஷெர்லி மூவீஸ் நஷீருக்கு நான் எந்த தருணத்திலும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. அவருடையை தயாரிப்பில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனவே இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்று தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் விளக்கம் அளித்துள்ளார் விமல்.

அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் களவாணி. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெயரைக் கேட்டு தேள் கொட்டியதைப் போல் மனுஷன் அலறுகிறார் என்றால்….

நிச்சயமாக இருவருக்கும் இடையில் மிகப்பெரிய பஞ்சாயத்து இருக்கும் என்று தோன்றுகிறது.

நமக்கெதுக்கு ஊர்வம்பு?