அல்வா கொடுத்த விஷால், அரவணைத்த சமுத்திரக்கனி…

thondan-stills-010

விஜய்யின் தம்பி (சித்தி மகன்) என்ற விசிட்டிங் கார்டோடு படத்துறைக்கு வந்தும் முதலிடத்தைப் பிடிக்காமல் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார் விக்ராந்த்.

சிசிஎல் கிரிக்கெட் விளையாடியபோது விஷால் உடன் நட்பு ஏற்பட்டதும், அவர் நடித்த பாண்டிய நாடு படத்தில் விக்ராந்துக்கு முக்கிய வேடம் கிடைக்கச் செய்தார்.

அதோடு, தன்னுடைய பேனரில் விக்ராந்தை ஹீரோவாக வைத்து படம் தயாரிப்பதாக அல்வா கொடுத்த விஷால், அதோடு அதை மறந்தேவிட்டார்.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கவண்’ படத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கிப்போராடும் இளைஞனாக சிறப்பான நடித்திருந்தார் விக்ராந்த்.

சிறிய வேடமாக  இருந்தாலும், விக்ராந்தின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சர்களின் மத்தியிலும் நல்ல பாராட்டுக்களைப் பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘தொண்டன்’ படத்திலும் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார் விக்ராந்த்.

இப்படத்தின் டிரைலர் யு ட்யூபில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, விக்ராந்துக்கும் நற்பெயரைத் தேடிக்கொடுத்திருக்கிறது.

கவண் படத்தில் கிடைத்த பெயரைவிட பல மடங்கு தொண்டன் படத்தில் விக்ராந்துக்கு பெயர் கிடைக்கும் என்று சொல்கின்றனர் சமுத்திரக்கனி யூனிட்டை சேர்ந்தவர்கள்.
சி.. தொண்டன் படம் குறித்து விக்ராந்த் என்ன சொல்கிறார்?

‘‘தொண்டன் என்றதும் எல்லோரும் இது ஏதோ பொலிடிக்கல் படம் என்று நினைக்கிறார்கள். ஆனால், சமுத்திரக்கனி அண்ணனின் வழக்கமான படங்களைப்போல இதுவும் சமூகப்பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்தான்.

இந்தப்படத்தில் நான் ஆம்புலன்ஸ் அட்டென்டராக நடித்துள்ளேன்.

சமுத்திரக்கனி அண்ணன் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்துள்ளார்.”

ஹீரோவாக நடித்து வந்த விக்ராந்த் இப்போது சின்ன வேடங்களில் நடிப்பது ஏன்?

“பெயர் தெரியாத படங்களில் ஹீரோவாக நடிப்பதைவிட, பெரிய படங்களில் முக்கியமான சின்ன ரோல்களில் நடிப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ‘கவண்’ படம் எனக்கு நல்ல பெயரை தேடிக்கொடுத்தது. ‘தொண்டன்’ படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது!’’

விக்ராந்தின்  நம்பிக்கை நிஜமாகட்டும்..