விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் மாதவன் நடிக்க மறுத்தது ஏன்?

vikramvedha

அலைபாயுதே படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே படத்துக்குப்படம் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்துநடித்து வருவதை வழக்கமாக வைத்திருப்பவர் மாதவன்.

இறுதிச்சுற்று படத்துக்குப் பிறகு பல பட வாய்ப்புகள் மாதவனைத் தேடிவந்தாலும், அவற்றை ஒப்புக்கொள்ளாமல் தட்டிக்கழித்தார் மாதவன்.

பின்னர் நீண்டஇடைவெளிக்குப் பிறகு விக்ரம் வேதா படத்தில் நடித்தார்.

அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் நடிக்காமல் இருக்கும் மாதவன் விரைவில் சற்குணம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்தப்படத்துக்கு முன்னதாக ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன்.

விண்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற நம்பி நாராயணன் எழுதிய ‘Ready To Fire: How India and I Survived the ISRO Spy Case’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார்.

புகழ்பெற்ற விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த பல அதிர்ச்சி தரும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகிருக்கிறது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமானமுறையில் உருவாகவிருக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்தாராம் மாதவன்.