ஸ்கெட்ச் படத்தில் சூரியை டம்மியாக்கிய விக்ரம்…!

ssm-2

படம் வெளியான அடுத்த நாளே சக்சஸ் மீட் நடத்துவது கோடம்பாக்கத்தில் வாடிக்கையாவிட்டது.

இதற்கு ஸ்கெட்ச் படமும் விதிவிலக்கில்லை.

சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தினார்கள்.

பொதுவாக இதுபோன்ற சக்சஸ் மீட்டை தயாரிப்பாளர்தான் நடத்துவார். ஸ்கெட்ச் படத்தின் சக்சஸ்மீட்டை படத்தின் நாயகனான விக்ரமே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழாவில் விக்ரம் உடன், தயாரிப்பாளர் தாணு, ஸ்கெட்ச் படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர், கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் அம்ருதா ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்கெட்ச் படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு பேசும்போது,

‘இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களில் ரிலீஸ் செய்தோம். ஸ்கெட்ச் 71 சென்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில்தான் வெளியிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.’ என்று குறிப்பிட்டார்.

‘கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான், கேமராமேன் சுகுமார் மூலமாக டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது.

இந்த படத்துக்கு சுகுமார் ஹார்ட் வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர்தான் காரணம்.

டைரக்டர் விஜய்சந்தர் இந்த கதையை பிரசண்ட் பண்ணின ஸ்டைலே ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேருந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணினார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர், பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். டேலண்ட் உள்ள கிரியேட்டர்.

இந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து முப்பது நாப்பது தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நான் எப்படி 1999 டிசம்பர் 10 ஆம் தேதி சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்காப் போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றதை ரசிச்சேனோ அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய்சந்தர் ரசிச்சிட்டு இருக்கார்.இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.

இந்த படம் தாணு சார் கையில் சென்றவுடன் சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டிஜி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு, இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க.

இந்தப் படத்தை கமிட் பண்ணினப்ப ஏன் இப்படி ஒரு படம் பண்றீங்கன்னு? எல்லாரும் கேட்டாங்க. இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும்தான் தெரியும். இப்போ கூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்ருக்குன்னு நியுஸ் வந்துட்டேயிருக்கு. இதைத்தான் தாணு சாரும் சொன்னார். நான் கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். எவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்த ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச்சா கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.

இந்த படத்துக்கு தமனோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி.இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.”

என்று நீண்ட உரையாற்றிய விக்ரம் அடுத்து பேசியது ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி பேச்சு.

“சூரி நடித்த காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான்தான். அதுக்காக சூரிகிட்ட நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.ஃபாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான்.

அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிராயசித்தமாக ஒரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயாராக இருக்கேன். இல்லைன்னா இரண்டு பேரும் ஹீரோவா சேர்ந்து நடிக்கவும் ரெடி.”

என்ற விக்ரம் சூரிக்கு, பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் என்று பட்டம் கொடுத்ததோடு. ‘அவர் படப்பிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது.’ என்றும் சிலாகித்தார்.