300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் படம்…

sketch-stills-007

விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் இன்னும் ஓரிரு நாட்களில் திரைக்கு வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த, ‘துருவ நட்சத்திரம்’ மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.

ஹரி இயக்கும், ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளார் விக்ரம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

மகாபாரத சரித்திரத்தில் இடம் பெறும் கர்ணன் கேரக்டரை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படவிருக்கிறது.

இதை ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இவர்.

‘மஹாவீர் கர்ணா’ என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும், ஹாலிவுட் கலைஞர்களும் பங்கு பெறவிருக்கிறார்களாம்.

இதற்கான் தேர்வு நடந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கி, இப்படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் வெளியிடவிருக்கின்றனர்.

ஹிந்தியில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகவிருக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் என்ற படநிறுவனம் இந்த படத்தை 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பட்ஜெட்டே 400 கோடிக்கும் குறைவுதான்.

தமிழிலேயே மார்க்கெட் இல்லாத விக்ரமை வைத்து 300 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பார்களா?

300 கோடியில் தயாரிக்கப்படும் படம் என்றால் குறைந்தபட்சம் 400 கோடிக்கு பிசினஸ் செய்தாக வேண்டும்.
விக்ரமுக்கு அந்தளவுக்கு மார்க்கெட் இருக்கிறதா?