படப்பிடிப்புக்கு முன்பே கைமாறிய பணப்பெட்டி

junka-1

விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் ‘ஜுங்கா’.

விஜய்சேதுபதி நடிப்பில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப்படத்தையும், கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ என்ற தோல்விப்படத்தையும் இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் அதாவது, 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவிருக்கிறது.

ஜுங்கா படத்தின் பெரும்பாலான காட்சிகளை பாரிஸில் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

‘வனமகன்’ படத்தில் அறிமுகமான சாயிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகாவே இந்தப்படத்தின் உரிமையை முதல் பிரதி அடிப்படையில் நடிகர் அருண்பாண்டியனின் ‘ஏ அண்ட் பி குரூப்ஸ்’ பட நிறுவனம் வாங்கியுள்ளது.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே ஒரு திரைப்படம் வியாபாரமாவது தற்போதைய சூழலில் மிகப்பெரிய விஷயம் மட்டுமல்ல சாதனையும் கூட.

விஜய்சேதுபதியின் ‘ஜுங்கா’ இப்படியொரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது.

காரணம்… விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் வணிகவெற்றிதான்.