விஜய் ஆண்டனியின் இரட்டை வேடம்…

vijayantonys-saithaan

விஜய் ஆண்டணி நடித்துவரும் சைத்தான் படத்தை இயக்கி வருபவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

இவர் சொன்ன கதையில் இம்ப்ரஸ்ஸாகித்தான்  சைத்தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் ஆண்டனி.

படப்பிடிப்பு தொடங்கிய பிறகு  இயக்குநரின் வேலைகளில் மெல்ல மூக்கை நுழைக்க ஆரம்பித்த விஜய் ஆண்டனி, இயக்குநரின் ஒப்புதல் இல்லாமலே சைத்தான் படத்தில் பல காட்சிகளை மாற்றிவிட்டாராம்.

அது மட்டுமல்ல,  படத்தின் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் முக்கிய வேடத்தில் ஒருவரை நடிக்க வைத்து  ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்த காட்சிகளை வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு, அந்த வேடத்திலும் தானே நடித்துவிட்டார் விஜய்ஆண்டனி.

இதனால் விஜய் ஆண்டனி மீது கடும் வருத்தத்தில் இருந்தாராம்  இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

அவரது வருத்தத்தை அறிந்த விஜய் ஆண்டனி, அவரை சமாதானப்படுத்தியதோடு, ‘கட்டப்பாவை காணோம்’ படத்தை அடுத்து நடிக்க நல்ல கதையைத் தேடிக் கொண்டிருந்த சிபிராஜிடம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி கொடுத்த பில்ட்அப்பை நம்பி  பிரதீப் கிருஷ்ண்மூர்த்தியிடம் கதை கேட்டிருக்கிறார் சிபிராஜ்.

அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால், உடனே ஓகே சொல்லிவிட்டார்.

தற்போது தனது அடுத்த படம்  பிரதீப் கிருஷ்ண்மூர்த்தி இயக்கத்தில்தான் என்று அறிவித்திருக்கிறார் சிபிராஜ்.

சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’ பட வேலைகளும், பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் ‘சைத்தான்’ பட வேலைகளும் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளதால் இரண்டும் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது!

இப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.