ஸ்டாலினை மெர்சல் ஆக்கிய ‘தளபதி’ விஜய் உடன் சன் பிக்சர்ஸ் கூட்டணி….

vijay61-merisal

சசிகலா குடும்பத்தில் நிலவும் கோஷ்டி பூசல்களை எப்படி புரிந்து கொள்ள முடியாதோ…

அப்படித்தான் கருணாநிதி குடும்பத்தின் கோஷ்டி சண்டையையும் புரிந்து கொள்ளவே முடியாது.

யாருடன் யார் உறவு?

யாரோடு யாருக்கு பகை?

நேற்று உறவோடு இருந்தவர்கள் யார்?

இன்று முட்டிக்கொண்டவர்கள் யார்?

என்பதை எல்லாம் யோசித்தால் மண்டையில் மயிரே இருக்காது.

அவ்வளவு இடியாப்பச் சிக்கல் நிறைந்தது கருணாநிதியின் குடும்பம்.

ஆனாலும்… ஒரு விஷயம் மட்டும் பளிச்சென்று புரியும்.

ஸ்டாலின் குடும்பத்துக்கும் கலாநிதி மாறன் குடும்பத்துக்கும் எந்தக்காலத்திலும் ஆகவே ஆகாது என்பதுதான் அது.

அதிகாரப்போட்டியில் வெல்வது யார் என்பதற்கான மோதலில் இரண்டு குடும்பங்களுமே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த உண்மையை பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன – கடந்த காலங்களில்.

ஸ்டாலின் – கலாநிதி மாறன் பகைக்கு லேட்டஸ்ட் உதாரண சம்பவம்… விஜய் நடிக்கும் 62ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய்யின் 62-ஆவது படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ள விஜய் தற்போது மூன்றாவது முறையாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையை தீர்மானிப்பதற்கு முன்னரே, படத்தின் பட்ஜெட் 150 கோடி என்பதை மட்டும் நிர்ணயித்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அவ்வளவு பெரிய முதலீட்டைக் கொட்டி படமெடுக்க யாரும் முன்வராத நிலையில், ஏற்கெனவே விஜய் நடிப்பில் ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ ஆகிய படங்களைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘விஜய்-62’ படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது.

சன் பிக்சர்ஸும் விஜய்யும் இணையும் மூன்றாவது படம் இது.

சரி.. இதற்கும் கலாநிதி மாறன், ஸ்டாலின் பஞ்சாயத்துக்கும் என்ன சம்மந்தம்?

அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தன்னுடைய பெயருக்கு முன் தளபதி என்ற பட்டத்தைப்போட்டு ஸ்டாலின் தரப்பை எரிச்சல் படுத்தினார் விஜய்.

அதே விஜய் உடன் தற்போது சன் பிக்சர்ஸ் கை கோர்த்திருக்கிறது.

இப்ப தலைப்பைப் படிங்க… லாஜிக் கரெக்ட்டா இருக்குமே…