விஜய் 62 படத்தில் புதிய இணைப்பு…. வரலட்சுமி, யோகிபாபு…!

vijay3

சிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் தனி கதாநாயகியாக அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் தனி கதாநாயகியாக நடித்தார்.

தாரை தப்பட்டை கிழிந்துபோனதால் வரலட்சுமியின் கதாநாயகி ஆசையும் கலைந்துபோனது.

எனவே கிடைக்கும் வேடங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

வரலட்சுமி இப்படியொரு முடிவுக்கு வந்தபிறகு அவரது திரையுலக வாழ்க்கையில் வசந்தம்.

வரிசையாக பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

ஆனாலும் வரலட்சுமியின் கேரியர் கிராஃப் பெரிய அளவில் உயரவில்லை.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் வரலட்சுமி.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கியது.

பின்னர் கொல்கத்தாவில் சில நாட்கள் நடைபெற்றநிலையில் இப்போது மீண்டும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ராதாரவி மற்றும் பிரபல அரசியல்வாதியான பழ கருப்பையா ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் காமெடியனாக நடிக்க யோகிபாபுவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.