விஜய் 62 படத்தில்  ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்?

vijay3

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்காததினால் ‘தளபதி 62’ என்று குறிப்பிடப்பட்டு வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தில்வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் வில்லனாக நடிக்கின்றனர்.

இவர்களுடைய கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

vijay62a

பழ. கருப்பையாவின் கதாபாத்திரம் ஓ.பன்னீர்செல்வத்தின் சாயலில் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வில்லனான ராதாரவியின் கதாபாத்திரம் எடப்பாடியை நினைவூட்டும்படி உள்ளதாக சொல்லப்படுகிறது.

எதிர் துருவங்களாக இருக்கும் இவர்கள் இருவரும் இணைப்புவிழா நடத்தி இணைவதுபோல் சமீபத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.