ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற விதி மதி உல்டா இசைவிழா… !

vidhi-madhi-ulta-stills-017

‘டார்லிங்-2’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்த ரமீஸ் ராஜா  அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் – ‘விதி மதி உல்டா’.

‘ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்’ பேனரில் தயாரித்து  ரமீஸ் ராஜா நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்குகிறார்.

‘‘மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு மட்டுமே உண்டு! அதுவே உல்டாவாகி விட்டால் என்ன விபரீதம் நடக்கும்? இது தான் ‘விதி மதி உல்டா’வின் கதை கரு. இதை காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரைக்கதையாக்கி இயக்குகிறார் விஜய் பாலாஜி’’  என்கிறார் ரமீஸ் ராஜா.

இந்த படத்தில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார்.

இவர்களுடன் வித்தியாசமான கேரக்டரில் டேனியல் பாலாஜி மற்றும் கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு  மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார்.

அஸ்வின் இசை அமைக்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் படமாகும் ‘விதி மதி உல்டா’வின் படப்பிடிப்பு  நடைபெற்று முடிவடைந்து விரைவில் வெண்திரைக்கு வருகிறது.

அதற்கு முன்னோட்டமாக விதி மதி உல்டா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

கபாலி பட இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

அண்மையில் விதி மதி உல்டா படத்தின் இசைவெளியீட்டை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ மாலில் நடத்தினர்.

ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இந்தவிழாவில் விதி மதி உல்டா படத்தின் பாடல்களை லைவ்வாக ஆடிப்பாடி அசத்தினார்கள்.