வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்தில் விஷ்ணுவிஷால் இல்லை…

vennilakabadikuzhu2-shoot-starts-today1

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் 7 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது.

விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி முதலானோர் அறிமுகமானது  இந்தப்படத்தில்தான்.

கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம்  ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

ஆனால் வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்தை சுசீந்திரன் இயக்கவில்லை.

இந்த படத்தின் மூல கதையை சுசீந்திரன் எழுதியிருப்பதோடு இதை தயாரிக்கவும் செய்கிறார்.

பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வ சேகரன் என்ற புதியவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அர்த்தனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

இவர்களுடன் பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்புக்குட்டி, லஷ்மி, பாவா லட்சுமணன், திருமா, விஜய் கணேஷ், பன்னீர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

வி.செல்வகணேஷ் இசை அமைக்கிறார். கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். காசி விஸ்வநாத் படத்தொகுப்பு செய்கிறார்.

இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு மாம்பாக்கம் கோவளஞ்சேரி முனீஸ்வரர் கோவிலில் இன்று துவங்கியது.

படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.