கௌதம் மேனனின் விபரீத ஆசையும்…. விக்ரம் கொடுத்த அதிர்ச்சியும்….!

dhruva-natchathiram-stills-001

பிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு இயக்குநர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.

இரண்டரை மணி நேர படத்துக்கு 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் அடியே போதுமானது.

அதிகட்பசம் 50 ஆயிரம் அடிக்கு ஷூட் பண்ணிவிட்டு, பிறகு எடிட்டிங்கில் நீளத்தைக் குறைப்பார்கள்.

பிலிம்மேக்கிங் டிஜிட்டல்மயமான பிறகு சகட்டுமேனிக்கு சுருட்ட ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள்.
டிஜிட்டல் ஆனதால் பிலிம் செலவு இல்லை என்றாலும் தினசரி படப்பிடிப்பு செலவு எகிறுவதை இயக்குநர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.
சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்துக்கு சுமார் 10 லட்சம் அடிக்கு மேல் ஷூட் பண்ணியிருக்கிறார் மோகன்ராஜா.

அதை பல தடவை எடிட் பண்ணிய பிறகும் 5 மணி நேரப்படமாக இருந்ததால், எடிட்டருக்கும் மோகன்ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டு எடிட்டர் நீக்கப்பட்டார்.

விக்ரமை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் இதே பிரச்சனை.

3 படத்துக்கு தேவையான அளவுக்கு சகட்டுமேனிக்கு சுருட்டித் தள்ளியிருக்கிறார் கௌதம் மேனன்.

எடுத்த காட்சிகளை வீணாக வெட்டி எறியாமல் அதையே இரண்டு பாகமாக வெளியிட்டால் டபுள் வருமானம் பார்க்கலாமே என்று யேசித்து வருகிறாராம்.

தன்னுடைய படங்களின் பிசினஸ் எத்தனை கோடி என்பதை கணக்குப்போட்டுப் பார்த்துவிட்டு, துருவ நட்சத்திரம் படத்தை இரண்டு பாகமாக வெளியிட்டால் எனக்கு இரண்டு படங்களுக்கான சம்பளம் தர வேண்டும் என்று செக் வைத்திருக்கிறார்.

விக்ரமிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத கௌதம் மேனன் வாயடைத்துப்போய்விட்டாராம்.