தயாரிப்பாளர்களை கொந்தளிக்க வைத்த ‘வேலைக்காரன்’ விளம்பரம்….

velaikkaran-24amstudios-siva_kartikeyan-rdrajaofficial-nayantharau-velaikkaranfl

நாளிதழ்களில் கொடுக்கப்படும் திரைப்படவிளம்பரங்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்கக்ககூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடு பல வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது.

இந்த கட்டுப்பாட்டைக் குலைக்கும் வகையில் வேலைக்காரன் படத்திற்கு முன்னணி நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.

சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி, அவரைச்சுற்றியுள்ளவர்கள் செய்த இந்த காரியம் படத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், தன்னுடைய இரண்டாவது தயாரிப்பாக வேலைக்காரன் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

அதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்தின் முழுப்பக்க விளம்பரம் சில நாளிதழ்களில் வெளியானது.

வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கியுள்ள விஜய் டிவியின் பெயரில் கொடுக்கப்பட்டதுபோல் ‘டிசைன் பண்ணப்பட்ட’ அந்த விளம்பரம், தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்த, இதை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சில தயாரிப்பாளர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது பினாமியான ஆர்.டி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அதோடு, தயாரிப்பாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுக்களிலும் தங்களுடைய மனக்குமுறலை கொட்டியுள்ளனர்…

அந்த பதிவுகள் நம் பார்வைக்கும் வந்தது.

அவற்றில் சில பதிவுகளை மட்டும் இங்கே வெளியிட்டிருக்கிறோம்…

dhj8jj-umaig3ld

…………

இன்று ஒரு நாள் விளம்பரத்திற்காக கிட்டதட்ட ஒருகோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தொழிலையும் சக தயாரிப்பாளர்களையும் நசுக்கிய வேலைக்காரன் தயாரிப்பாளர் & விஜய் டிவி மீதும், முதன் முதலில் முழு பக்க விளம்பரம் கொடுத்த கபாலி மற்றும் பைரவா தயாரிப்பாளர்கள்மீதும் தயாரிப்பாளர் சங்கம் பாராபட்சமின்றி உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

…………

கடந்த நிர்வாகத்தின்போது சேனல்களோடு நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில்…. நிர்வாகத்தின் மூலமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது…

அதில் ஒன்று … எந்த நடிகர்களும் சேனல்களுக்கு சீஃப் கெஸ்ட்டாக செல்வதோ… சேனல்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதோ… கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது…

அதையும் மீறி சிவகார்த்திகேயன் மலேசியாவில் விஜய் டி வி நடத்திய விழாவில் கலந்து கொண்டார்.

கடந்த நிர்வாகம் ஏனோ அதை கண்டு கொள்ளவேயில்லை, அப்போதே கட்டுப்பாடு மீறல்கள் கண்டிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இந்த நிகழ்வு நடந்திருக்காது.

அன்று பொறுப்பில் இருந்தவர்கள் அவரவர் தேவைக்காக அனைவரையும் அரவனைத்துப்போனதன் விளைவே இன்று விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது.

– மிட்டாய் அன்பு

……………..

கடந்த நிர்வாகம் தவறு செய்தது என்பதால், இப்போது முழுப்பக்க விளம்பரம் சரியாகி விடுமா?

பழையதைக் கிளறுவதை விட்டுவிட்டு இந்த வேலைக்காரன் விதி மீறலுக்கு நம் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்று கூறுங்கள்.

அதுதான் நேர்மையான சான்றோர்களின் செயலாக இருக்கும்.

– கஸாலி

…………..

 

என்ன செய்யப்போகிறது சங்கம்?

விளம்பர கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் பொதுவானது.

பெரிய தயாரிப்பாளர்கள் முழுப்பக்கம் விளம்பரம் தருவதால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஈடு கொடுக்க முடியாது என்பதால் கொண்டு வரப்பட்டதுதான் இந்த விளம்பர கட்டுப்பாடு.

இதை மீறி இன்றைய தினகரன் மற்றும் தினத்தந்தி நாளிதழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் முழு பக்கம் விளம்பரம் தந்திருக்கும் தயாரிப்பாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது நமது சங்கம்?

– ஜி.எம். டேவிட் ராஜ்

…………….

 

ஆர்.டி. ராஜாவுக்கு ஒரு கார் கூட இல்லைனு சிவகார்த்திகேயன் அழுதார் பாவம்.

அந்த ஏழைதான்அனைத்து தினசரி நாளிதழிலும் முழு பக்க விளம்பரம் கொடுத்துருக்காரு.

– சுரேஷ் காமாட்சி

…………

 

மிகவும் கண்டனத்துகுறிய செயல்.

ஆர்.டி ராஜா தயாரிப்பாளராக இருந்து கொண்டு இவ்வாறு செய்வது தயாரிப்பாளர்கள் ஒற்றுமையை கெடுப்பது போல் உள்ளது.

இந்த விசயத்த கொஞ்சம் சிவியரா கவனிங்க.

எனக்கு பயமா இருக்கு எதிர்காலத்த நினைத்து.

ஒன்று சேருவோம் வரும் 18 ஆம்தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கேட்டு விடலாம் திமிறி எழுந்து.

– அன்புடன் ஜெயசீலன்

……….

இந்த இரு பேப்பர்களில் கொடுத்த விளம்பர செலவிற்கு எட்டு தோட்டாக்கள் போல் ஒரு நல்ல படமெடுத்துவிடலாம்

…………..

பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான். விட்டுவிடலாம் என்றால் அதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது.

பல் இருப்பது பால் பல்லாகவோ, ஆரோக்கியமான மனிதப் பல்லாகவோ இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

கபாலி, பத்து எண்றதுக்குள்ள, பைரவா, இப்போது வேலைக்காரன் என்று நீண்டு வருவது வெறி கொண்ட மிருகப் பல்லாய் இருப்பதுதான் வேதனை.

கம்பீர மிருகம் கடித்து விடுமோ என்ற பயம் தேவையில்லை.

கூட்டு சேர்ந்தால் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

ஒன்று சேர்வோம். குரல் கொடுப்போம். குரல்வளை நெறிக்கப்பட்டால் திமிறி எழுவோம். வேடிக்கை பார்க்க இது ஒன்றும் விளையாட்டல்ல. வேதனை!

– கஸாலி

………….

இதற்கு ஒரு வழி, சங்கம் முலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்காமல் செய்வது.

 

…………

சுய கட்டுப்பாடு இல்லாத எந்தவொரு மனிதனும், அவர்கள் செய்யும் தொழிலும் உருப்பட்டதாக சரித்திரமில்லை.

இந்த உண்மையை சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, அவரை பின்னால் இருந்து இயக்குபவர்களும் உணர்ந்து திருந்த வேண்டும்.

– ஜெ.பிஸ்மி