ரஜினியின் படத்தலைப்பில் பாபிசிம்ஹா படமா? – கடுப்பில் கழுவி ஊற்றும் ரஜினி ரசிகர்கள்…

bobbysimha1

ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில் கோ-2, கவலை வேண்டாம் என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா அதே நிறுவனத்தின் தயாரிப்பில் வீரா என்ற படத்திலும் நடிக்கிறார்.

‘வீரா’ ரஜினி காந்த் நடித்த படத்தின் தலைப்பு.

நகைசுவையுடன் ஆக்ஷன் கலந்த இந்த ஜனரஞ்சகமான கதைக்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார் பாக்கியம் சங்கர்.

வீரா படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் கே. ராஜாராமன்.

“எனது நிறுவனம் சார்பாக பல் வேறு திறமையான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் ராஜாராம் எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு.

புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக்கொண்டு இருக்கிறது’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

இதற்கிடையில் ரஜினி நடித்த வீரா படத்தின் பெயரை பாபி சிம்ஹா நடித்த படத்துக்கு பயன்படுத்துவதா என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் பாபி சிம்ஹாவை கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர்.

காரணம்… பாபிசிம்ஹாவின் பேராசைப் பேச்சுதான்.

“நான்தான் அடுத்த ரஜினி” என்று பாபிசிம்ஹா பேசிவருவது ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும்கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியொரு சூழலில்தான், எரிகிறி தீயில் எண்ணெயை ஊற்றியதுபோல் ரஜினியின் படத்தலைப்பை இப்போது பாபிசிம்ஹா நடிக்கும் படத்துக்கு தாரை வார்த்திருக்கிறார்கள்.