சல்மான் கானுக்கு பரிசளித்த வருண் தவான்

Varun sews Salman a gift3

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ‘சுய் தாகா’ படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

சுய் தாகா படத்தில் நடிகர் வருண் ‘மௌஜி’ என்ற கதாபாத்திர பெயரில் தையல் வேலைப்பாடு செய்யும் நபராக நடித்துள்ளார்.இதற்காக இவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு ஆடை தைக்க ,சாயம் இட கற்றுக்கொண்டார்.

படத்தின் விளமப்ர பணியில் பிசியாக இருக்கும் வருண் தவான் நடிகர் சல்மான் கானால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக சென்றார்.

சல்மான் கான் மிகப்பெரிய உட்ச நட்சத்திரம்.அவருக்கு பிடிக்கும் வகையில் சிறப்பு பரிசு அளிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.பிறகு தன்னால் ஒரு ஜெர்கின் ஒன்றை தாயார் செய்து அதில் Made in india என எழுத்துக்களை பதித்து அவருக்கு சிறப்பு பரிசளித்தார்.

“இந்த ஜெர்கின் என்னால் செய்யப்பட்டது.அவரை காண சென்றேன்.இந்த சிறப்பு பரிசை அவருக்கு அளித்தேன்.அவர் இந்த பரிசினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.” என வருண் தவான் தெரிவித்துள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த மாதம் 28 ஆம் வெளியாக இருக்கிறது.