வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா இணைந்து நடிக்கும் படம் Comments Off on வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா இணைந்து நடிக்கும் படம்

வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ள ‘சுய் தாகா – மேட் இன் இந்தியா’ படத்திற்காக 40 நாட்கள் விளம்பர வேலைக்காக ஒதுக்கியுள்ளனர்.

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம்.

2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.

மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .

மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகிய இரண்டுபேரும் புகழ்பெற்ற நடிகர்கள். இவர்கள் இந்த படத்தின் மேல் அதிக நம்பிக்கையை வைத்து தங்களது கால் சீட்டில் இருந்து 40 நாட்களை இப்படத்தின் விளம்பர வேலைக்காக தந்துள்ளனர்.

கண்டிப்பாக இந்த படம் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையும் எனவும், சுயமாக தொழில் செய்து யாரையும் நம்பி வாழாமல் நம்மால் வாழ முடியும் என்ற நல்ல கருத்தினை கொண்ட படமாக அமையும் எனவும் வருண் தவான் ,அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இப்படத்தின் முன்னோட்டத்தின் முதல் சிறுபகுதியை பார்த்துள்ளனர். பார்த்த பின்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக எந்த ஒரு நடிகர்களும் அவர்களது படத்தின் விளம்பர பணிக்காக 20 நாட்கள் மட்டுமே ஒதுக்குவார்கள்.ஆனால் வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இப்படம் சமூகத்தில் அதிக அளவில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் 40 நாட்களை விளம்பர வேலைக்காக தந்துள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க சொந்தமாய் யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தினை கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தி அவர்களின் வழியை பின்பற்றும் வகையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற செய்தியையும் தெரிவிக்கிறது.

இந்த படத்தில் வருண் தவான் தையல்காரராகவும் அனுஷ்கா ஷர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர்.

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மாஆகியோர் மிகவும் திறமைசாலியான நடிகர்கள்.இப்படத்தின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர், மேலும் 40 நாட்கள் பட விளம்பரத்திற்காக ஒதுக்கியுள்ளனர் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படம் அவர்களுக்கு கனவுப்படம் என்றும் அதிக அளவில் மக்களுக்கு இப்படம் செல்லவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ‘சுய் தாகா – மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
சீமராஜா படத்தின் டீசர்…

Close