இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பஞ்சாயத்து….! – வடிவேலுவை கைவிட்ட விஷால்…

vadivelu_2


வடிவேலு நீண்டஇடைவெளிக்குப் பிறகு நடிக்க ஒப்பந்தமான இம்சைஅரசன் 24 ஆம் புலிகேசி.
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றநிலையில் பேசிய சம்பளத்தைவிட இரண்டு மடங்கு சம்பளம் கேட்டிருக்கிறார்.

இதற்கு தயாரிப்பாளர் ஷங்கர் உடன்படவில்லை. எனவே கடுப்பான வடிவேலு பல வழிகளிலும் இயக்குநர் சிம்புதேவனுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

அதோடு அதை மாத்து இதை மாத்து என்று அநியாயத்துக்கு குடைச்சல் கொடுத்து நிஜமான இம்சை அரசனாக மாறினார்.

வடிவேலுவின் டார்ச்சர் எல்லைமீறிப்போனதால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் படத்தையே ட்ராப் பண்ணிவிட்டார்.

தொடர்ந்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகார் மீது தயாரிப்பாளர் கவுன்சில் சரியான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்திருக்கிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் நமக்கு சப்போர்ட் பண்ணிய வடிவேலு மீது நடவடிக்கை எடுப்பதா என்று விஷால் தயங்குவதாக தகவல் கேள்விப்பட்டு கடுப்பாகிவிட்டாராம் ஷங்கர்.

கவுன்சில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போலீஸில் புகார் கொடுக்கப்போவதாக சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு கவுன்சில் செயலாளர்களான கதிரேசன், ஞானவேல்ராஜா இருவரும் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர்.

விரைவில் வடிவேலுவை பஞ்சாயத்துக்கு அழைத்து ஷங்கருக்கு ஏற்பட்ட 3 கோடி நஷ்டத்தை வசூலிக்க இருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் தன்னை விஷால் காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் இருந்த வடிவேலுவுக்கு கவுன்சிலின் வேகம் பீதியைக் கிளப்பி இருக்கிறது.