உங்க அடுக்குமொழியில் தீய வைக்க… – ‘கோமாளி’ டி.ராஜேந்தருக்கு எதிராக கொந்தளிப்பு…! Comments Off on உங்க அடுக்குமொழியில் தீய வைக்க… – ‘கோமாளி’ டி.ராஜேந்தருக்கு எதிராக கொந்தளிப்பு…!

கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் நிரந்தர கோமாளியாக இருப்பவர் டி.ராஜேந்தர்.

ஒரு குடிகாரன் எப்படி எல்லாம் உளறுவானோ அதற்கு சற்றும் குறையாமல் மேடைகளில்  உளறிக்கொண்டிருக்கும்  டி.ராஜேந்தர், சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை தன்ஷிகாவை அவமானப்படுத்தினார்.

பேச்சின் துவக்கத்தில் தன்னுடைய பெயரை குறிப்பிடவில்லை என்ற கோபத்தில் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்ட கோமாளி டி.ராஜேந்தரை, மேடையில் இருந்தவர்கள் கண்டிக்கவில்லை.

அங்கிருந்த பத்திரிகையாளர்களும் வேடிக்கைப் பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் கோமாளி டி.ராஜேந்தரின் செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன.

டி.ராஜேந்தர் தன்னை அவமானப்படுத்தியது பற்றி தன்ஷிகா நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்காமலே சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனே கொந்தளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார் விஷால்.

““ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே…

நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆருக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.”

என்ற விஷால், “இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.”

என்று விதார்த், கிருஷ்ணாவின் மண்டையில் னங்கென்று குட்டியும் இருக்கிறார்.

கோமாளி டி.ராஜேந்தரின் செயலை பெண் பத்திரிகையாளர்கள் சிலரும் கண்டித்துள்ளனர்.

“பல கடினமான நிலைகளைக் கடந்து ஒரு பெண் நடிகையாக நின்றால் ‘சாரி கட்டிக்கொண்டு வராமல் சாரி கேட்பதாக’ எதுகை மோனை வார்த்தைகைளில் வசவுகிறார் டி.ஆர் போன்ற அனுபவசாலிகள்.

தன்ஷிகாவை வார்த்தைகளால் குத்திக் கிழித்த டி.ஆருக்கு …. உங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள நீங்கள் என்ன தன்ஷிகாவை வைத்து படம் எடுத்தீர்களா இல்லை…. உங்கள் மகன்தான் தன் படத்தில் வாய்ப்புக் கொடுத்தாரா?

அவர் கண்கலங்கி கால்களை தொட்டபோதாவது மன்னித்திருக்கலாமே ..

ஏன் ஒரு சீனியர் நடிகராக இந்த சகிப்புத்தன்மை கூட இல்லை.

இன்று வருடத்திற்கு 40க்கும் மேலான புதுமுக நடிகைகள் அறிமுகம் ஆகின்றனர். எவ்வளவு பெரிய போட்டி இருக்கும். இதில் தப்பிப் பிழைத்து தனக்கென ஒரு இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை.

இப்படி போராடும் நடிகைகளை சினிமா துறையினரே அதிலும் டி.ஆர் அவர்கள் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களே நசுக்கினால் எப்படி ஏற்றுக்கொள்வது. பல பெண்களை உடலளவில் காயப்படுத்துவதை விட கொடுமையானது ஒரு பெண்ணின் மனதைக் காயப்படுத்துவது. நடிகைகளை தொடாமல் நடித்த கண்ணியவான் என்னும் பெயர் இந்த ஒற்றை செயலால் வீண்..’’

– பத்திரிகையாளர் ஷாலினி நியூட்டன்

“உங்க பெயரை எதற்கு தன்ஷிகா சொல்லணும் டி.ராஜேந்தர் அவர்களே?

‘விழித்திரு’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைத் தவிர உங்கள் பங்கு ஒன்றுமில்லை.
நான் படம் பார்த்துவிட்டேன். உங்கள் நினைவு அவருக்கு வராமல் போனது இயல்புதான்.

இதற்குக் கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாத உடல்மொழியோடும், வாய்மொழியோடும் நீங்கள் பேசிய பேச்சு அருவருப்பின் உச்சம்.

தன்ஷிகா பணிவோடு சீனியர் என்கிற மரியாதையோடு பேசுகிறார்.

ஒருமுறை கிட்டத்தட்ட குனிந்து கால்களைத் தொட்டு கேட்பதுபோல் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் திமிர் உங்களுக்கு அடங்கவில்லை. ‘சாரி கட்டிக்கொண்டு வராமல் ஸாரி கேட்கிறாய்’ என்று சொல்கிறீர்கள்.

உங்க அடுக்குமொழியில் தீய வைக்க…அவங்க என்ன உடையில் வந்தால் உங்களுக்கு என்ன?
கேட்டு வாங்குவதா மரியாதை..?

தன்ஷிகா கண்கலங்கும் அளவுக்கு தரந்தாழ்ந்து பேசுகிறீர்கள்.

இப்படி மேடைக்கு மேடை உளறிவருவதால் தான் உங்கள் மேலிருந்த மரியாதை மக்கள் மத்தியில் போனது.

சக கலைஞரை மதிக்கத் தெரியாத, நாகரிகம் அற்ற உங்கள் பெயரை உச்சரிக்காத தன்ஷிகாவுக்கு வாழ்த்துகள்.

உங்களுக்குப் பின்னால் அந்தக் காணொளியில் சில முகங்கள் தெரிந்தன. அம்முகங்களின் சிரிப்பும் கைத்தட்டலும் உங்கள் பேச்சின் அருவருப்புக்கு சற்றும் சளைத்ததல்ல.”

– பத்திரிகையாளர் கவின்மலர்

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
மெர்சல் டைட்டில் பஞ்சாயத்து..! – விஜய்யை டென்ஷனாக்கும் சங்கங்கள்….!

Close